ஹராரே:ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஹராரே நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ராகுல் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி ஜிம்பாப்வே வீரர்கள் முதலில் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தை போல இந்த ஆட்டத்திலும் ஜிம்பாப்வேவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்களுக்குள்ளாகவே அந்த அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
நிலைத்து நின்று ஆடிய சீன் வில்லியம்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் 42 ரன்களுக்கு அவுட் ஆனதும் , ஜிம்பாப்வே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்களும் மற்ற வீரர்கள் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.