ராஜ்கோட்:தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று (ஜூன் 17) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில், களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடியால், தென்னாப்பிரிக்க அணிக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
கேப்டனுக்கு காயம்:இதனைத் தொடர்ந்து, ஆடிய தென்னாப்பிரிக்க பேட்டர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். இதனால், அந்த அணி 16.5 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்கா பேட்டிங்கில் அதிகபட்சமாக வான் டெர் டஸ்ஸன் 20 (20) ரன்களை எடுத்தார். புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சின்போது டெம்பா பவுமா தோள்பட்டையில் பந்து தாக்கியது. இதனால், ரிட்டயர் - ஹர்ட் மூலம் அவர் வெளியேறினார்.