தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2022, 7:27 AM IST

ETV Bharat / sports

ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

ஆசிய கோப்பை டி20 தொடரில் ஹாங்காங்குக்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி
ஹாங்காங்கை வீழ்த்திய இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

துபாய்:ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கியது. துபாய் மற்றும் சார்ஜாவில் உள்ள மைதானங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் முதலாவது போட்டி பாகிஸ்தானுடன் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்தது.

இந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து 2ஆவது போட்டி ஹாங் காங் கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று (ஆகஸ்ட் 31) துபாயில் நடந்தது. முதலில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத்கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளுக்கு 68 ரன்களை குவித்தார். அதேபோல விராட் கோலி 44 பந்துகளுக்கு 59 ரன்களையும், கேஎல் ராகுல் 39 பந்துகளுக்கு 36 ரன்களையும் எடுத்தனர்.

மறுப்புறம் பந்துவீச்சில் ஆயுஷ் சுக்லா, முகமது ஹசான்பர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். அந்த வகையில் 193 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் நிஜாகத் கான் மற்றும் யாசிம் முர்தசா இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் வந்த பாபர் ஹயாத் நிதானமாக விளையாடி 35 பந்துகளுக்கு 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் களத்தில் இருந்த கின்சித் ஷா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்தவர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தனர். இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2022 முழு அட்டவணை

ABOUT THE AUTHOR

...view details