பர்மிங்ஹாம்:இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் கடந்த போட்டியை போன்று இதிலும் சொதப்பினர். இதனால், 17 ஓவர்களிலேயே அந்த அணி 121 ரன்களில் ஆல்- அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்திய அணி பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 3, சஹால், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்தில் அதிகபட்சமாக மொயின் அலி 35 (21), பந்துவீச்சாளரான டேவிட் வில்லி 33 (22) ரன்களை எடுத்தனர்.
முன்னதாக, பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா 46 (26) ரன்களை எடுத்து பெரிய இலக்கிற்கு வித்திட்டார். மேலும், ரோஹித் 31 (20), ரிஷப் பந்த் 26 (15) ரன்களை எடுத்து ஓப்பனிங்கில் மிரட்டியதால் இந்திய அணிக்கு பலமான அஸ்திவாரம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.