ஹைதராபாத்:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடருக்கான இறுதி போட்டி இன்று(செப்-25) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தில் தொடரை 2-1 என்ற கணக்கில் கைபற்றியது.
இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்களும், விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்களும் விளாசி, ஒரு பந்து மீதமிருக்க இந்தியாவிற்கான இலக்கை நோக்கி விளையாடியது. டேனியல் சாம்ஸ் (2/33) 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் (1/40), பேட் கம்மின்ஸ் (1/40) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்தியா சார்பில் அக்சர் படேல் (3/33) 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் (1/39), யுஸ்வேந்திர சாஹல் (1/22), ஹர்ஷல் படேல் (1/18) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.