டப்ளின்: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த நிலையில், அடுத்ததாக அயர்லாந்து சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாட உள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய இவர் கடைசியாக 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு நாள் உலக கோப்பை நெருக்கும் நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பும்ரா காயத்தில் இருந்து மீண்டது இந்திய ரசிகர்களுக்கு மிகவும் ஆறுதலை அளிக்கிறது.
இதையும் படிங்க:தடையில்லா சான்றிதழ் பெறாமல் அமெரிக்கா சென்ற வீரர்கள்.. விளக்கம் கேட்டு பாக். கிரிக்கெட் வாரியம் நேட்டீஸ்!
இந்நிலையில் தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமையில் எதிர்கொள்கிறது. துணை கேப்டனாக ரூதுராஜ் கெய்க்வாட் நியமிக்கபாட்டுள்ளார். மேலும், இளம் வீரர்களான ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த தொடருக்காக இந்திய அணி நேற்றய முந்தினம் விமானம் மூலம் அயர்லாந்து சென்றது.