தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா வலிமைமிக்க அணி; பல வெற்றிகளை குவிப்பார்கள் - சொல்கிறார் கேன் வில்லியம்சன் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்றாலும், இந்தியா வலிமையான அணி என்றும், வருங்காலத்தில் பல வெற்றிகளை குவிப்பார்கள் என்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

Kane Williamson,கேன் வில்லியம்சன்
Kane Williamson

By

Published : Jun 29, 2021, 5:18 PM IST

ஆக்லாந்து (நியூசிலாந்து):உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கைபற்றியது நியூசிலாந்து அணி. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

ஒரு போட்டி போதுமா?

அதில்," நீண்ட போட்டித் தொடரின் வெற்றியாளரை, ஒரே ஒரு இறுதிப்போட்டியை வைத்து முடிவு செய்வது என்பது ரசிகர்களுக்கு ஆர்வமூட்டுவதற்கு மட்டுமே பயன்படும். அந்த ஒரு போட்டியை வைத்துக்கொண்டு ஒரு அணியின் தரத்தை மதிப்பிடுவது சரியாக இருக்காது.

அதுபோல்தான் இந்திய அணியையும் இந்த போட்டியை வைத்து மட்டும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களையும், சுழற்பந்துவீச்சாளர்களையும் வைத்துள்ளனர். அவர்களின் பேட்டிங்கை பற்றி சொல்லவே வேண்டாம், மிக தரமான பேட்டிங் வரிசையை கொண்டவர்கள்.

இந்தியாவிற்கு இனி வசந்தமே

தற்போதைய இந்திய அணி வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. அவர்கள் வருங்காலத்தில் தொடர்ச்சியாக பல வெற்றிகளை குவிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. இத்தகைய வலிமையான அணிக்கு எதிராக நாங்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பை: கைவிரித்தது இந்தியா; அடுத்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details