ஹராரே:கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் 189 ரன்களை இலக்கை விக்கெட் இழப்பின்றி துரத்திய இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரோ விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆக. 19) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல், ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
இந்திய அணி தரப்பில் தீபக் சஹாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணியில் தடிவானாஷே மருமணி, ரிச்சர்ட் ங்கராவா ஆகியோருக்கு பதிலாக கைடானோ, தனகா சிவாங்கா சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், அதற்கு முட்டுக்கட்டைப் போட ஜிம்பாப்வே அணி வீரர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.