டெல்லி: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் இன்று (பிப். 6) காலை மும்பை பீரிச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.
92 வயதான அவரின் மறைவிற்கு, மத்திய அரசு இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால், இரண்டு நாள்களும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளன.
இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கைகளில் கறுப்புபட்டைகள் அணிந்து விளையாட உள்ளனர் என பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
1000ஆவது போட்டி
இப்போட்டி குஜராத் தலைநகர் அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. முக்கியமாக, இந்தப் போட்டி இந்தியாவின் 1000ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். மேலும், 1000 போட்டியை விளையாடும் முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மே.இ.தீவுகள் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக செயலிழந்த உறுப்புகள்.. லதா மங்கேஷ்கரை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்!