தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs WI: தொடரை வெல்லுமா ரோஹித் & கோ... இன்று 4ஆவது டி20! - ரோஹித் சர்மா

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவார்டு ரிஜினல் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

தொடரை வெல்லுமா ரோஹித் & கோ
தொடரை வெல்லுமா ரோஹித் & கோ

By

Published : Aug 6, 2022, 4:09 PM IST

Updated : Aug 6, 2022, 4:37 PM IST

இந்திய அணி, மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வைட்-வாஷ் செய்தது.

டி20 தொடரில், மூன்று போட்டி நிறைவடைந்துள்ளது. முதல் மற்றும் மூன்றாம் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் மே.இ. தீவுகள் அணியும் வென்றன. இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், நான்காவது டி20 போட்டி இன்று (ஆக. 6) நடைபெறுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் சென்ட்ரல் ப்ரோவார்டு ரிஜினல் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ரோஹித் தலைமையிலான இந்திய அணியும், தனது இரண்டாவது வெற்றியை பெற பூரன் தலைமையிலான மே.இ.தீவுகள் அணியும் இருக்கின்றன.

உத்தேச பிளேயிங் லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

மே.இ. தீவுகள்: நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), பிரன்டன் கிங், கைல் மையர்ஸ், ரோவ்மேன் பாவெல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், தேவான் தாமஸ், அகேல் ஹூசைன், டொமினிக் டிரேக்ஸ், ஓபெட் மெக்காய், ரோமரியோ ஷெப்பேர்டு.

இதையும் படிங்க:மல்யுத்தத்தில் தங்கம் வென்ற பஜ்ரங்,தீபக்,சாக்‌ஷி - குவியும் பாராட்டு!

Last Updated : Aug 6, 2022, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details