கயானா: இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த நிலையில், அவர் 51 ரன்னில் அவுட்டானார்.
இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்னும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அகீல் ஹொசைன், அல்ஜாரி ஜோசப், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர், 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக வீசினார். முதல் பந்தில் பிராண்டன் கிங்கை அவுட்டாக்கினார்.
அதனைத் தொடர்ந்து 4வது பந்தில் ஜான்சன் சார்லசை வெளியேற்றினார். கைல் மேயர்ஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 4-ஆவது விக்கெட்டுக்கு நிகோலஸ் பூரனுடன் ரோவ்மன் பாவெல் ஜோடி சேர்ந்தார். பூரன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாவெல் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.