செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்:இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்டத்தொடர்களில் விளையாட மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வைட்-வாஷ் செய்தது.
முதல் டி20 போட்டியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி மேற்கு இந்தியத்தீவுகளின் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் நாட்டில் உள்ள பாசெட்டர் நகரில் நடைபெறுகிறது.
போட்டி நடைபெறும் வார்னர்ஸ் பார்க் மைதானத்தில் இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதுவரை இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் 182 மட்டுமே. மேலும், சராசரியாக இங்கு முதல் இன்னிங்ஸில் 119 ரன்களும், இரண்டாம் இன்னிங்ஸில் 93 ரன்களும் பதிவாகியுள்ளன.
முன்னதாக, 2ஆவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத்தொடங்கும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது போட்டி இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை போட்டியை ஒளிபரப்பும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. போட்டி தள்ளிப்போனதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகளின் தொடர் வெற்றி: பயிற்சியாளரின் பிரத்யேக பேட்டி!