பெங்களூரு: இலங்கை அணி, இந்தியாவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (மார்ச் 12) தொடங்கியுள்ளது.
வலுபெறும் இந்தியா
பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில், 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். இலங்கை எம்புல்தெனியா, ஜெயவிக்கிரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, பேட்டிங்கைத் தொடர்ந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 86 எடுத்து, 166 ரன்கள் பின்தங்கியிருந்தது.
5 ஓவர்களில் காலி
இந்நிலையில், டிக்வெல்லா, எம்புல்தெனியா ஆகியோர் இரண்டாம் நாள் ஆட்டத்தை நேற்று (மார்ச் 13) தொடங்கினர். மேலும், ஆட்டம் சிறு தாமதாகவே தொடங்கியது. ஆட்டம் தொடங்கி 5 ஓவர்களில் இலங்கை அணி ஆல்-அவுட்டானது. வெறும் 109 ரன்களை மட்டுமே எடுத்த இலங்கை, 143 ரன்கள் பின்தங்கியிருந்தது. இந்திய அணி சார்பில், பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு, மயாங்க் - ரோஹித் ஜோடி சுமாரான தொடக்கத்தை அளித்தது. 22 ரன்கள் எடுத்து மயாங்க் எம்புல்தெனியா பந்துவீச்சில் வெளியேறினார். விஹாரியுடன் இணைந்து வேகமாக ரன் சேர்த்து வந்த கேப்டன் ரோஹித், 46 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து வந்த விஹாரி 35, கோலி 13 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது களமிறங்கிய ரிஷப் பந்த், இலங்கை பந்துவீச்சாளர்களை சிதறடித்தார்.
கபில் தேவ்வை தாண்டிய பந்த்