கொழும்பு (இலங்கை):இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
ஜூலை 13ஆம் தேதி தொடங்க வேண்டிய ஒருநாள் தொடர், இலங்கை பேட்டிங் பயிற்சியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை.18) கொழும்புவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா, இந்திய அணியை பந்துவீச பணித்துள்ளார்.
இந்திய அணி தரப்பில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், இலங்கை அணியில் பானுகா ராஜபக்ஷ ஆகியோர் தங்களது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி: தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்செயா டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, பானுகா ராஜபக்ஷ, சாரித் அசலங்கா, வஹிந்து ஹசரங்கா, இசுரு உடானா, சாமிகா கருணாரத்ன, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன்.
இந்திய அணி:ஷிகார் தவான் (கேப்டன்), புவனேஷ்வரா் குமார் (துணை கேப்டன்), பிருத்வி ஷா, இஷான் கிஷன், மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சஹார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால்.
இதையும் படிங்க: மிடில் ஆர்டரின் சிறந்த பேட்ஸ்மேன் ஹர்திக் - ரஸ்ஸல் அர்னால்டு