விசாகப்பட்டினம்: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்காக இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பயிற்சியின்போது காயம் காரணமாக கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் இருவரும் தொடரிலிருந்து விலகினர். இதனால், கேப்டனாக ரிஷப் பந்தும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டனர்.
டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், கட்டக்கில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணியை தோற்கடித்தது. இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், 3ஆவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி ஏசிஏ - விடிசிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.