தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND vs AUS: ஷமி, ஜடேஜா அபார பந்துவீச்சில் ஆல்அவுட்டானது ஆஸ்திரேலியா - 2nd test score

பார்டர் கவாஸ்கர் டிராபி 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 6:41 PM IST

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கினை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். ஷமி வீசிய முதல் பந்திலேயே இந்திய அணி எக்ஸ்ட்ராக்களாக நான்கு ரன்கள் கொடுத்தது. கவாஜா தன் பங்கிற்கு ஷமி, சிராஜ் ஆகியோர் பந்துகளில் பவுண்டரிகளாக விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் 15 ரன்களுக்கு வார்னர், ஷமி பந்தில் அவுட்டானார்.

சற்றுநேரம் தாக்குபிடித்து விளையாடிய லபுஷேன், அஷ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் 18 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அஷ்வின் பந்தில் டக் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறியது. மறுமுனையில் சற்று நிதானமாக ஆடிய கவாஜா டெஸ்ட் போட்டியில், தனது 20-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களில் ஷமி பந்தில் ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பின்னர் களமிறங்கிய ஹெண்ஸ்காம்ப் நிலைத்து நின்று ஆடினார். மறுபக்கம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த கவாஜா, ஜடேஜா பந்தில் ராகுலிடம் லெக் திசையில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன் முலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா தனது 250வது விக்கெட்டை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, அஷ்வின் பந்தில் டக் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி 168 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறியது.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், அஷ்வின் பந்தை பவுண்டரி, சிக்ஸர்களாக சிதறடித்தார். 7-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்தில் கம்மின்ஸ் 33 ரன்களுக்கு எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். அதே ஓவரில் மர்பி, ஜடேஜா பந்தில் போல்டானார். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய டெயிலண்டர்கள் லியான், குனெமன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஹெண்ட்ஸ்காம் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய பந்து வீச்சாளர்களில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட்களும், அஷ்வின், ஜடேஜா தலா 3 மூன்று விக்கெட்களும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து சேத்தன் ஷர்மா விலகல்!

ABOUT THE AUTHOR

...view details