டெல்லி: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
சமீபத்தில், நடந்த முடிந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு முதல் டி20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது. இவர்கள் அடுத்த இரு டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கோலி vs பந்த்: எனவே, இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கப்போகிறது என்பது தான் ஹாட் -டாப்பிக். கடந்த போட்டியில், இஷான் கிஷனை தவிர அனைத்து பேட்டர்கள் சிறப்பாக விளையாடினர். இஷானின் இடம் மட்டும் கேள்விக்குறி என்றாலும், அந்த இடத்திற்கு விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நிலவும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இல்லையெனில், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு விராட், ரிஷப் இருவருக்கும் அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விராட்டை அப்படியே விட்டுவிட முடியாது: இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"விராட் கோலி திறமையுள்ளவர். அவர் மீண்டும் ஃபார்மிற்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் தற்போது ஃபார்மில் இல்லை என்பதால் அவரை அப்படியே விட்டுவிட முடியாது.