பெங்களூரு (கர்நாடகா): 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற வருகிறது. இந்த உலகக் கோப்பை ஆரம்பம் முதலே ரோகித் ஷர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று (நவ.12) நடைபெற்று வரும் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய ரோகித் ஷர்மா இந்த ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் எடுத்தார்.
2015ஆம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 58 சிக்ஸர்கள் அடித்து ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏ.பி.டி வில்லியர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதன்பின், இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் தற்போது வரை 59 சிக்ஸர்கள் அடித்து ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2019ஆம் ஆண்டில் 56 சிக்ஸர்கள் அடித்து மூன்றாம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் 22 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டனாக இயோன் மோர்கன் இருந்தார். தற்போது நடைபெற்றும் வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 23 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்று முதலிடத்தையும் ரோகித் ஷர்மா பிடித்துள்ளார்.
ஒரு நாள் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்கள் பட்டியல்:
- 23* - 2023ல் ரோஹித் ஷர்மா*
- 22 - 2019ல் இயான் மோர்கன்
- 21 - 2015ல் ஏபி டி வில்லியர்ஸ்
- 18 - 2019ல் ஆரோன் பிஞ்ச்
- 17 - 2015ல் பி மெக்கல்லம்