தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

AUS Vs SA: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு! - உலக கோப்பை கிரிக்கெட் 2023

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 வது அறையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அணி தென் ஆப்பிரிக்கா அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

AUS Vs SA
AUS Vs SA

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 1:36 PM IST

கொல்கத்தா:13வது ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இராண்டவது அரையிறுதிப் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கப்படவுள்ளது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இது வரை தென்னாப்பிரிக்கா அணி பல முறை அரையிறுதிப் போட்டிக்கு வந்தாலும், இது வரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. இதனைத் தகர்த்து நடப்பு உலகக் கோப்பையில் வரலாற்றை மாற்றி எழுதுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இரு அணி வீரர்கள் பட்டியல்

தென்னாப்பிரிக்கா அணி:குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி ரெசாட் வில்ஜிடிம்ஸ், லிசாட் வில்ஜிடிம்ஸ், தப்ரைஸ் ஷம்சி, மார்கோ ஜான்சன்.

ஆஸ்திரேலியா அணி:ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷான், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன்.

இதையும் படிங்க:சில வாய்ப்புகளை தவற விட்டோம்.. வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்த ரோகித் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details