டெல்லி : கிறிஸ் கெயிலின் சாதனை புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை கிழித்து உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து உள்ளார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (அக். 11) நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் வீசிய 8வது ஓவரில் ரோகித் சர்மா தனது மூன்றாவது சிக்சர் பறக்கவிட்டார். இந்த சிக்சரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அதிவேகமாக 550 சிக்சர்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
இதற்கு முன் இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தன் வசம் வைத்து இருந்தார். அதை தற்போது ரோகித் சர்மா முறியடித்து உள்ளார். ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டிகளில் மொத்தம் 453 ஆட்டங்களில் களமிறங்கி உள்ள ரோகித் சர்மா இதுவரை 554 சிக்சர்கள் அடித்து உள்ளார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 550 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ரோகித் சர்மா 453 போட்டிகளில் 556 சிக்சர்களை அடித்து உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை காட்டிலும் 30 ஆட்டங்களுக்கு முன்னதாகவே ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்து உள்ளார்.