சென்னை: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 11வது லீக் போட்டியாக நியூசிலாந்து - வங்கதேசம் அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்த போட்டியில் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான கேன் வில்லியம்சன் வங்கதேசம் எதிரான அணி தேர்வுக்கு தயாராக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கேன் வில்லியம்சன் நாளை நடக்க இருக்கும் போட்டி தேர்வுக்கு தயாராக உள்ளார் என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார். இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணி விளையாடிய இரு போட்டிகளிலுமே வில்லியம்சன் மற்றும் சவுதி ஆகியோர் விளையாடவில்லை. இந்த நிலையில் அவர் அணிக்கு திரும்புவது கூடுதல் பலமாகும். அதேநேரம் காயத்தில் இருந்து சரியாகி வரும் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியும் நாளை சென்னையில் நடக்க இருக்கும் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் பங்கேற்க்க போவதில்லை என கேன் வில்லியம்சன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; "காயத்தில் இருந்து மீண்டு உலகக் கோப்பை அணிக்குள் திருப்புவது மகிழ்ச்சியை தருகிறது. அதை எதிர்நோக்கி ஆர்வமுடன் உள்ளேன். மேலும், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி காயத்தில் இருந்து நன்றாக முன்னேறி வருகிறார். அதே சமயம் நாளை வங்கதேசதிற்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார்" என அவர் கூறினார்.