மும்பை:ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆஸ்திரேலியா அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், மேக்ஸ்வெல்லின் அபார இரட்டை சதத்தால் 46.5 ஓவர்களில் 293 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுத்திக்கு தகுதி பெற்றது.
இது குறித்து ஆட்ட நாயகன் மேக்ஸ்வெல் கூறுகையில், “நாங்கள் ஃபீல்டிங் செய்தபோது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், என்னால் அதிகமாக உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. அணி சரிவில் இருந்த போதும், பாசிட்டிவ் மைண்ட்செட்டில் இருந்தேன்.
மேலும் எங்களது பேட்டிங் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதே நேரத்தில் எனது வழக்கமான ஷாட்டுகளை ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். வெற்றிக்கான வாய்ப்பே இல்லாத ஒரு போட்டியில் ஒரு சான்ஸ் எடுத்து ஆடியதில் மகிழ்ச்சி. இது எனக்குப் பெருமையாக உள்ளது. எப்போதுமே எங்கள் அணிக்கு நம்பிக்கை அதிகம். அது இந்த போட்டியின் மூலம் மேலும் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.
சாதனைகள்:ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 128 பந்துகளில் 201 ரன்கள் ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார், மேக்ஸ்வெல். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் வீசிய வீரர்.