பெங்களூரு:13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடின.
இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், சுப்மன் கில் 51 ரன்களிலும், ரோகித் ஷர்மா 61 ரன்களிலும், விராட் கோலி 50 ரன்களிலும் மற்றும் கே.எல்.ராகுல் 102 ரன்களிலும் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 410 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். அதன்பின் களம் இறங்கிய மிடில் ஆடர் வீரர்கள் அதிரடியாக விளையாடியனர். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 128 ரன்களை குவித்தார். மேலும் கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 2 ரன்களை எடுத்தார்.