கொல்கத்தா:13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில் உலகக் கோப்பையின் தொடரின் 44வது லீக் போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.கொல்கத்தா ஈட ந் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஷ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி ஒப்பனராக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ - டேவிட் மலான் ஜோடி நிதானமாக விளையாடி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்தது. போட்டியின் 7வது ஓவரில் ஆட்டத்தின் முதல் சிக்ஸரை பறக்கவிட்டார் பேர்ஸ்டோ இதன் மூலம் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்தது இங்கிலாந்து. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் (பவர்பிளே) முடிவில் 72 ரன்கள் குவித்தது.
ஆட்டத்தின் 13.1 ஓவரின் போது இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மலான் தனது விக்கெட்டினை இஃப்திகார் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 31 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். பின்னர் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ஜானி பேரிஸ்டோவ் 52 பந்துகளில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்து விளையாடி வருகின்றார்.
16.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 18.2 ஓவர்களில் 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் ரவுஃப் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
200 ரன்கள்:26.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது இங்கிலாந்து. களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் 53 பந்துகளில் அரைசசம் கடந்தார். 34.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 200 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் மற்றும் பென்ஸ் கூட்டணி 100 பார்ட்னர் சிப்பை கடந்து சிறப்பாக விளையாடு வருகின்றனர். பென்ஸ் 80 ரன்களுடன் ரூட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.