ஈடன் கார்டன் (கொல்கத்தா): 2023 ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் 44வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ.11) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஷ் படலர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 337 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்து 84 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 60 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 59 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் பவுலர்களில் ஹரிஸ் ராப் சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் 337 ரன்களை 6.4 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும் மேலும் குறைந்தது 188 ரன்கள் எடுத்தால் மட்டுமே டாப் 5 இடத்தில் நீடிக்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணியினர் களமிறங்கினர்.