அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் முதல் 8 ஓவர்களை பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வீசினர்.
இதனையடுத்து, 9வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச வந்தார். அந்த ஓவரில் 7 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதன்பின் தனது இரண்டாவது ஓவராக ஆட்டத்தின் 11வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 13வது ஓவரை வீசிய அவர் முதல் பந்தில் 1 ரன்னும், இரண்டாவது பந்தில் ஃபோரும் வழங்கினார்.
தொடர்ந்து ரன்களை வாரி வழங்கிய பாண்டியா மூன்றாவது பந்தை வீசுவதற்கு முன் பந்திடம் ஏதோ பேசினார். பின்னர் அந்த பந்தை பாண்டியா வீச இமாம் உல் ஹக் அதை அடிக்க முயன்று எட்ஜ் செய்தார். அதனை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் லாவகமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
36 ரன்கள் எடுத்த நிலையில் இமாம் உல் ஹக் வெளியேறினார். பாண்டியா பந்திடம் ஏதோ பேசி விட்டு வீசிய நிலையில், அந்த பந்திலையே விக்கெட்டை எடுத்தது பேசும் பெருளாக மாறியுள்ளது. இது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாண்டியா பந்திடம் பேசும் படத்தை பகிர்ந்து கமண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Kane Williamson Injury: முதல்ல கால்.. இப்போ கை.. என்னடா இது! கேன் வில்லியம்சனுக்கு வந்த சோதனை!