புனே:13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்நிலையில் உலகக் கோப்பையின் 43 லீக் ஆட்டத்தில் புள்ளிபட்டியளில் 3வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணி, 8வது இடத்தில் உள்ள வங்கதேசம் அணியுடன் மோதுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன் படி லிட்டன் தாஸ் - தன்சித் ஹசன் வங்க தேச அணியின் ஓப்பனராக களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி 5 ஓவர்கள் முடிவில் 20 ரன்கள் எடுத்தது. பின்னர் அவ்வப்போது ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினர். இந்நிலையில், தன்சித் ஹசன் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 106ஆக் இருந்த போது நீண்ட நேரம் நிலைத்திருந்த லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார்.
சீராக விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்தாலும் அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் அணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கத் தவறவில்லை. இதனால் வங்கதேசத்தின் ரன்னும் சீராக உயர்ந்தது. டவ்ஹித் ஹ்ரிடோய் 79 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் சேர்த்துள்ளது.