புனே (மகாராஷ்டிரா): 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 43வது போட்டி ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று (நவ.11) புனேவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 306 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகப்படியாக டவுகித் ஹிர்தோய் 74 ரன்களும், கேப்டன் ஷாண்டோ 45 ரன்களும், லிட்டன் தாஸ் 36 ரன்களும் மற்றும் டன்சித் ஹாசன் 36 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்கள் சீன் அபாட் மற்றும் ஆடம் ஹாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, வெற்றிக்கு 307 ரன்கள் தேவை என ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன் டிராவிஸ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் 44.4 ஓவரில் 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் மார்ஷ் தனது அதிரடியான விளையாடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல், 177 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 63 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர்.