புனே:உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்க உள்ளது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் பொற்றுள்ளன. இருப்பினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி 5 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்திலும் உள்ளது.
மைதானம் எப்படி: புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு உகந்த மைதானமாகவே காணப்படுகிறது. இந்த மைதானத்தில் நடந்த 8 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 300க்கும் மேல் ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் சிக்ஸர் மலை பொழிய வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம், என்றும் சேஸிங் செய்வது இந்த மைதனத்தில் சுலபமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றன.
பலம்&பலவீனம்:இலங்கை ஆப்கான் என 2 அணிகளுமே 5 போட்டியில் 2 வெற்றி பெற்று அரையிறுதிக்கான களத்தில் உள்ளன. தொடரின் தொடக்கத்தில் முதல் 3 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி கடந்த 2 போட்டிகளில் நெதர்லாந்து, இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.