லக்னோ: ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 14-வது லீக் ஆட்டம் நேற்று (அக்.16) லக்னோவில் நடைபெற்று முடிந்தது. இதில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை உறுதி செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நல்ல தொடக்கத்தையே அளித்தது. அவர்கள் தங்களது முதல் விக்கெட்டை இழப்பதற்கு 125 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடி 26 ஓவர்களில் 150 ரன்களை கடந்த அந்த அணி அடுத்த 60 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பாக ஆடம் ஜம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா விக்கெட்களை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இதனால் இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸின் அரைசதத்தால், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பலாக விளையாடிய ஆடம் ஜம்பா, இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
போட்டியின் முடிவில் ஆடம் ஜம்பாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய ஆடம் ஜம்பா, “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இன்று நான் உடலளவில் நன்றாக உணரவில்லை. ஏனெனில் கடந்த ஓரிரு நாட்களாக எனக்கு முதுகுப் பிடிப்பு இருந்தது. ஆனாலும், இன்று சிறப்பாகப் பந்து வீசியுள்ளேன்.