மேற்கு வங்கம் (கொல்கத்தா): சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து, ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியில், மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக செம்படம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணியில், சுழற்பந்து வீச்சாளர்களாக ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவிற்கு பிறகு மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக அக்ஸர் பட்டேல் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் அக்ஸர் பட்டேல் காயத்தில் இருந்து மீண்டு வர மேலும், நான்கு முதல் ஐந்து வாரங்கள் ஆகும் என கூறப்பட்டது.
இது குறித்து பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் ஈடிவி பாரத்திடம் கூறும்போது, "ரவிச்சந்திரன் அஸ்வினைத் தவிர எங்களுக்கு வேறு யாரையும் தேர்வு செய்வதாக தெரியவில்லை. ஏனெனில், அவர் பல அணிகளுடன் விளையாடிய ஒரு அனுபவமிக்க சிறந்த வீரராக இருக்கிறார்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அஸ்வினை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு அஸ்வின் உலகக் கோப்பை தொடர் போட்டிகள் விளையாடும் அளவுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள கால அவகாசம் கேட்டதாகவும், அதன் பின்னரே அஸ்வின் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.