தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ICC Women World Cup 2022: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து - மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

icc-womens-world-cup-india-lose-to-new-zealand-by-62-runs
icc-womens-world-cup-india-lose-to-new-zealand-by-62-runs

By

Published : Mar 10, 2022, 4:45 PM IST

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய, நியூசிலாந்து வீராங்கனைகள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்படி ஐம்பது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக எமி சாட்டர்த்வைத் 84 பந்துகளுக்கு 75 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அமெலியா கெர் 64 பந்துகளுக்கு 50 ரன்களுடனும், கேட்லி மார்ட்டின் 51 பந்துகளுக்கு 41 ரன்களையும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி பந்துவீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அந்த வகையில், 261 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இறுதியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி 46 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 63 பந்துகளுக்கு 71 ரன்களை எடுத்தார். இதையடுத்து மிதாலி ராஜ் 56 பந்துகளுக்கு 31 ரன்களை எடுத்தார்.

இதையும் படிங்க:வெளியானது வார்னேவின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்; தாய்லாந்து போலீசார் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details