டெல்லி: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்.17) முடிவடைந்தது. அதேபோல், தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதிய 5 ஒருநாள் போட்டி தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 115 புள்ளிகளுடன் இடண்டாவது இடத்திலும் மற்றும் ஆஸ்திரேலியா அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
நேற்று வரை ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இவர்கள் ஐசிசி உலக கோப்பைக்கு முன்பாக மீண்டும் முதல் இடத்திற்கு வர வேண்டுமானால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.
இதையும் படிங்க:Mohammed Siraj: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள்.. வரலாற்று சாதனை படைந்த முகமது சிராஜ்!