துபாய் : ஐசிசி தரவரிசை பட்டியல் துபாயில் இன்று (ஜூலை 14) வெளியானது.
பந்துவீச்சை பொறுத்தமட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபபியன் ஆலன் 10ஆவது இடத்திற்குள் முன்னேறியுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் இரண்டு இடங்கள் முன்னேறி 22ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
டூவைன் பிராவோ 7 இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தில் உள்ளார். ஒபேட் மெக்கோய் 15 இடங்கள் முன்னேறி 38ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
பேட்டிங்கை பொறுத்தவரை 26 வயதான பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராத் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பாபர் அசாம் 873 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை விட விராத் கோலி 16 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
ஒரு நாள் தொடர்
மூன்றாவது இடத்தில் உள்ள ரோகித் சர்மா 825 புள்ளிகள் பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் 119 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா (118), மூன்றாம் இடத்தில் இந்தியா (115), அடுத்ததடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா (103), பாகிஸ்தான் (93), வங்க தேசம் (90), வெஸ்ட் இண்டீஸ் (82), இலங்கை (77) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
டெஸ்ட்டில் இந்தியா முதலிடம்
10ஆவது இடத்தில் 62 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் உள்ளது. டெஸ்ட் அணியை பொறுத்தவரை இந்தியா (119) முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஆஸ்திரேலியா (108), இங்கிலாந்து (107), பாகிஸ்தான் (94), தென் ஆப்பிரிக்கா (88), வெஸ்ட் இண்டீஸ் (78), இலங்கை (78), வங்க தேசம் (49) மற்றும் ஜிம்பாப்வே (31) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.