துபாய்: ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் இன்று(பிப்.9) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா 807 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2ஆவது இடைத்தையும் தக்க வைத்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் அரைசதம் மூலம் பெற்ற புள்ளிகள் மூன்றாவது இடத்தை அளித்துள்ளது. பாபர் அசாம் மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களைப் பிடித்துவருகின்றனர்.