டெல்லி : உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு உள்ளது. Dil Jashn Bole என்ற தலைப்பில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடர்ங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன் 1987, 1996, 2011 என மூன்று முறை இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்திருந்தாலும், அத்தனை முறையும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து தான் இந்தியா தொடரை நடத்தியது. ஆனால் இம்முறை ஒட்டுமொத்த தொடரும் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு உள்ளது. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், Dil Jashn Bole என்ற தலைப்பிலான பாடலை வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க :அழிவின் விளிம்பில் பறவை இனங்கள் - பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் எச்சரிக்கை என்ன?