இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பும்ரா , ஐசிசி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் 718 புள்ளிகளை பெற்று , 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி பவுலிங் தரவரிசை - நம்பர் 1 இடத்தை பிடித்த பும்ரா - பும்ரா
ஐசிசி ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்புரித் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி பவுலிங் தரவரிசை
நியூசிலாந்தின் போல்ட் 712 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் , பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 681 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் டாப் 10ற்குள் முன்னேறியுள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான 3வது டி-20ல் சதம் விளாசியதன் மூலம் 44 இடங்களில் முன்னேறி 732 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளார்.