தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - முழு விவரம்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணி அறிவிப்பு

By

Published : Dec 28, 2022, 11:47 AM IST

Updated : Dec 28, 2022, 12:14 PM IST

மும்பை:இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், மூன்றாவது போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலும் (ஜன.7) நடக்கிறது.

ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியிலும், இரண்டாவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 15ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் நடக்கிறது. இந்த போட்டிகளில் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி20 தொடர்களில் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் இடம்பெறவில்லை. அதேபோல ஷிகர் தவான், ரிஷப் பண்ட் இருவரும் இரண்டு தொடரிலும் இடம்பெறவில்லை. தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் தொடரில் மட்டும் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி டி20 தொடர்:ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் படேல். சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

இந்திய அணி ஒருநாள் தொடர்:ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க:IPL 2023 Auction: இன்று நடைபெறுகிறது ஐபிஎல் 2023 மினி ஏலம்

Last Updated : Dec 28, 2022, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details