துபாய் :அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் மே இறுதி வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. ஐபிஎல் தொடரை முன்னிட்டு துபாயில் மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 333 வீரர்கள் பங்கேற்றனர்.
நட்சத்திர வீரர்களை ஏலம் எடுப்பதில் அணி உரிமையாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. அண்மையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கைப்பற்றிய நிலையில், அதன் தாக்கம் ஐபிஎல் மினி ஏலத்தில் பிரதிபலித்தது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் மவுசு நிலவியது.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர்கள் அதிகம் கவனம் ஈர்த்தனர். இவர்களுக்கு மத்தியில் இந்திய வீரர்களும் அவ்வப்போது கவனம் ஈர்க்கக் கூடிய வகையில் ஏலம் போயினர். தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் 7 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்திற்கு வாங்கப்பட்டார்.
கடந்த சீசனில் ஷாருக்கான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய நிலையில், அண்மையில் அந்த அணி நிர்வாகம் அவரை கழற்றி விட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஏலத்தில் கலந்து கொண்டார். ஷாருக்கானை மீண்டும் அணியில் எடுக்க பஞ்சாப் அணி நிர்வாகம் முயற்சித்தது. அதேநேஅம் அவரை ஏலத்தில் எடுக்க குஜ்ராத் டைட்டன்ஸ் அணியும் ஆர்வம் காட்டியது.
இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்ட நிலையில், இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஷாருக்கானை 7 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சென்னையை சேர்ந்த ஷாருக்கான் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இதுவரை கலந்து கொள்ளாத நிலையில், ஐபிஎல் தொடரில் 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆட்டக்காரரான ஷாருக்கான் ஐபிஎல் தவிர்த்து டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்ல் கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2023ஆம் ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷாருக்கான் கவனம் ஈர்த்தார்.
இதையும் படிங்க :IPL Auction 2024 : அதிக விலைக்கு போன் டாப் 5 வீரர்கள்! இந்திய வீரர்களுக்கு வந்த சோகம்!