மும்பை: கிரிக்கெட்டின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், இதுவரை இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 663 போட்டிகள் விளையாடியுள்ளார். அதில் அவர் 100 சதங்கள், 164 அரைசதங்கள் உட்பட 34,347 ரன்கள் விளாசியுள்ளார்.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் வாழ்வில் பல சாதனைகளைப் படைத்த இவரைக் கவுரவிக்கும் வகையில், முழு உருவச் சிலை ஒன்றை மும்பை வான்கடே மைதானத்தில் அமைக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கி முழு உருவச் சிலையானது செய்யப்பட்டது.