மெல்போர்ன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளுக்கான அணியை சமீபத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்த ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், தனது கணுக்காலில் எற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 34 வயதுடைய க்ளென் மேக்ஸ்வெல், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இடது காலில் எற்கனவே உலோக பிளேட் வைத்திருந்தார். தற்போது அதே காலில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது காயம் எற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:4×400 Metres Relay: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இந்திய அணி.. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து!