தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Cricket World Cup 2023: கே.எல்.ராகுலா? இஷான் கிஷனா? மனம் திறந்த இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர்!

உலக கோப்பை இந்திய அணியில் இளம் வீரரான இஷான் கிஷனுக்கு விக்கெட் கீப்பிங் பணி வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் நயன் மோங்கயா தெரிவித்து உள்ளார்.

Nayan Mongia
Nayan Mongia

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 6:13 PM IST

அகமதாபாத்: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை நாளை மறுநாள் தெடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும், இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இதில் இந்தியா ஆட்டங்களும் அடங்கும்.

இந்தியா அணி கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு ஐசிசி டிராபியை இந்திய அணி வென்றது. சொந்த மண்ணில் நடப்பதால் இம்முறை உலக கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்யப்போவது இஷான் கிஷனா அல்லது கே.எல்.ராகுலா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான நயன் மோங்கியா இந்திய அணிக்காக இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான நயன் மோங்கியா ஈ.டிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, "ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு நேரத்தில், ஒரு ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், அதே போல் எதிர்ப்பார்ப்புகளின் மீது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இந்திய அணிக்கு ஒரு நிரந்தர விக்கெட் கீப்பர் இருக்க வேண்டும். அந்த இடத்திற்கு இஷான் கிஷன் சரியாக இருப்பார் என்பது எனது விருப்பம். மேலும், அவர் ஒரு இடது கை பேட்டருமாவார். நெருக்கடியான சூழ்நிலைகளில் இஷான் கிஷன் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் இருப்பது அணிக்கு நல்ல பலனை தரும்.

அதே நேரத்தில் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது. இந்திய அணியில் சிறந்த பேட்டர்கள், ஆல்-ரவுண்டர்கள் மற்றும் தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் இந்திய அணி ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தினால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமே. ஆகையால் 2011ஆம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு சாதகமான சூழல் தென்படுகிறது. அதேபோல், இந்தியாவின் சுழல் தாக்குதல், அணிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களில் எதிர் வீரர்களை சுலபமாக கட்டுப்படுத்த திறன் கொண்டவர்கள்.

மேலும், வரும் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரசிகர்கள் ஒரு சாதரான போட்டியாகவே பார்க்க வேண்டும். அதை இரு நாட்டுக்கு நடக்கும் யுத்தம் போல் கருதக்கூடாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:Asian Games Cricket : இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி! நேபாளத்தை ஊதித் தள்ளியது!

ABOUT THE AUTHOR

...view details