சண்டிகர்: இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி(77), நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.
1946ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசர்ஸில் பிறந்த இவர், இந்தியாவுக்காக 67 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் 14 முறைகள் 5 விக்கெட்களையும், 1 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இவர் 1966 முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்காக விளையாடினார். இதில் 22 ஆட்டங்களுக்கு பிஷன் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த காலக்கட்டத்தில் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவர்.
இவருக்கு கடந்த 1970ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கு மத்திய அரசு கவுரவித்தது. இந்நிலையில், 77 வயதான பிஷன் சிங் பேடி இன்று (அக்.23) காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிஷன் சிங் பேடி இன்று காலமானார். அவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆசிய பாரா விளையாட்டு : தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்று சாதனை! இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தல்!