ரஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலம் ரஞ்சியில் பிசிசிஐயின் முன்னாள் செயலாளரும், ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க தலைவருமான அமிதாப் சவுத்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. அவர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க தலைவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். அப்போதுதான் ரஞ்சியில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான மைதானம் கட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்கு மேலாளராக இருந்தார். அதன்பின் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிசிசிசியின் செயலாளராக பணியாற்றினார். இவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.