டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (ஆகஸ்ட் 03) டிரினிடாட் தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியின் மூலம் வேகபந்து வீச்சாளர் முகேஷ் குமார் மற்றும் இடது கை பேட்டர் திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானர்கள்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கைல் மேயர்ஸ் மற்றும் பிராண்டன் கிங் களம் முதலில் இறங்கினர். 4 ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் சூழல் பந்து வீச்சில் அடுத்தடுத்து மேயர்ஸ் 1 ரன்னிலும், பிராண்டன் கிங் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த பூரான் அதே ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி அவரது அதிரடியை தொடங்கினார்.
பின்னர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சார்லஸ் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து களம் இறங்கிய ரோவ்மேன் பவல் பூரானுடன் இணைந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 96 எட்டிய நிலையில், பூரான் திலக் வர்மாவிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார்.