ஐதராபாத் :13வது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதுவரை 40 லீக் ஆட்டங்கள் நிறைவு அடைந்துள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் 5 லீக் ஆட்டங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 4வது அரைஇறுதி வாய்ப்பை பெறுவதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன.
இந்த நிலையில், மும்பையில் வரும் 15ஆம் தேதி முதல் அரை இறுதியும், கொல்கத்தாவில் 16ஆம் தேதி இரண்டாவது அரை இறுதியும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 19ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.