கொல்கத்தா : கடந்த 2021ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் பவுண்டரி எண்ணிக்கைகள் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க சூப்பர் ஓவர் உள்ளிட்ட விதிமுறைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது.
13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்களும் அதில் வெற்றி பெற்றும் புள்ளி பட்டியலில் முதன்மை பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுகளுக்கும் தகுதி பெறும்.
முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் தரமான சம்பவங்களுக்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதலாவது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.