தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2021, 8:27 PM IST

Updated : Jul 17, 2021, 8:48 PM IST

ETV Bharat / sports

மிடில் ஆர்டரின் சிறந்த பேட்ஸ்மேன் ஹர்திக் - ரஸ்ஸல் அர்னால்டு

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை கண்ட லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிறந்த வீரர் ஹர்திக் பாண்டியா என, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்டு ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தோனி, ஹர்திக் பாண்டியா
தோனி, ஹர்திக் பாண்டியா

கொழும்பு: இந்திய - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 18) கொழும்புவில் நடைபெறுகிறது. இரண்டு அணிகள் குறித்தும் இத்தொடர் குறித்தும் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் அர்னால்டு நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பேசியுள்ளார்.

கேம் செஞ்சர் - 'ஹர்திக்'

ஹர்திக் பாண்டியா - இந்திய ஒருநாள், டி20 அணிகளின் நட்சத்திர ஆல்-ரவுண்டர். பாண்டியா பல போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், சமீபகாலமாக அவரால் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியவில்லை.

இடைநிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் பந்துவீசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாண்டியா குறித்து அர்னாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்வி:ஹர்திக் பாண்டியாவை போன்று இந்திய அணியில் வேறு யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஹர்திக் பாண்டியா

பதில்: லோயர் மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ்மேன்களில் இந்திய அணி கண்ட சிறந்த வீரர் ஹர்திக் பாண்டியாதான். இறுதி ஓவர்களில் பாண்டியா களமிறங்குவது, இந்திய அணிக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

கேள்வி: இந்தியா, இலங்கை அணிகளில் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிக்கும் வீரர்களாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ரஸ்ஸல் அர்னால்டு

பதில்: இலங்கை அணியில் சொல்ல வேண்டுமானால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அவிஷ்கா பெர்னாண்டோவை நான் கூறுவேன்.

இந்திய அணியைப் பொறுத்தவரை தவானும், பாண்டியாவும் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை பிருத்வி ஷாதான் பெரிய அளவில் சோபிப்பார்.

கடந்த காலங்களில் இலங்கை அணி, சனத் ஜெயசூர்யா, மகிளா ஜெயவர்தனே, குமார் சங்ககரா, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் போன்ற வீரர்களால் மிகவும் வெல்வதற்குக் கடினமான அணியாகத் திகழ்ந்துவந்தது.

ஆனால், தற்போதைய அணி வலுக்குன்றி, போட்டித்திறன் குறைவாகக் காணப்படுவதால், இந்தத் தொடர் இந்தியாவுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்று கூறுப்படுகிறதே என்ற கேள்விக்கு அர்னால்டு பின்வருமாறு பதிலளித்தார்.

சண்டை செய்யினும்

"இலங்கை அணியில் முன்னாள் சிறந்த வீரர்களும் ஜாம்பாவன்களும் இடம்பெற்றிருந்தனர். ஆனால், நாங்கள் இருதரப்பு தொடர்கள் (bilateral series) எதையும் வென்றதில்லை. இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினமானதுதான்.

இந்திய அணியை இலங்கை அணி பல சர்வதேசத் தொடர்களில் வீழ்த்தியுள்ளது. இலங்கை அணியோ, இல்லை வேறு எந்த அணியாக இருந்தாலுமோ சரி, போட்டிப்போடுவதுதான் முதன்மையானது. நீங்கள் கடினமாகப் போட்டி போடாவிட்டால் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்" என்றார்.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா... ரசிகர்கள் உற்சாகம்!

Last Updated : Jul 17, 2021, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details