ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக் (49) புற்றுநோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். 1990 முதல் 2005 வரை ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய இவர் தலைசிறந்த பந்து வீச்சாளராகத் திகழ்ந்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாவே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 189 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாவே அணியின் பிரபலமான வேகப்பந்து வீச்சாளராக அறியப்பட்டாலும், அவர் மிடில் ஆர்டரில் களம் இறங்கி பேட்டிங்கிலும் கலக்கி உள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 1,990 ரன்களும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 942 ரன்களும் அடித்து உள்ளார்.
இதையும் படிங்க:IND VS PAK: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து... இந்தியாவின் நிலை என்ன?
ஆல்ரவுண்டரான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 216 விக்கெட்களையும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 239 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இவர் கடைசியாக 2005ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின் ஓய்வை அறிவித்தார்.