தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

T20: நியூசிலாந்திடம் தர்ம அடி வாங்கிய இந்தியா - ரோஹித் ஷர்மா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூசிலாந்து

By

Published : Feb 6, 2019, 4:39 PM IST

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து 219 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து தொடக்க வீரர் டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.


இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.


ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்திக், விஜய் சங்கர், க்ருணல் பாண்டியா ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இந்திய அணி தரப்பில் தோனி மட்டுமே அதிகமான ரன்களை அடித்தார். இறுதி வரை களத்தில் நின்று விளையாடிய அவர் 31 பந்துகளில் 5 பவுண்ட்ரி, ஒரு சிக்சர் உட்பட 39 ரன்களை எடுத்தார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்று, மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details